வியாழன், 16 ஜனவரி, 2014

எழுத்தாளர் தாமரைக்கண்ணன் புகைப்பட தொகுப்பு


டாக்டர் தாமரைக்கண்ணன்
                                                                                    
தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் பரிசு பெற்ற சங்கமித்திரை நாடக நூலுக்கு, 16.1.1984 ஞான்று தமிழக அரசு சார்பாக மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஆயிரம் ரூபா பரிசும் பாராட்டு இதழும் வழங்கினார். இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை 34. விழா : திருவள்ளுவர் திருநாள். 
                                                                               
தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் பரிசு பெற்ற ‘வரலாற்றுக் கருவூலம்’ எனும் கல்வெட்டு ஆராய்ச்சி நூலுக்கு 16.1.1985 ஞான்று, முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஆயிரம் ரூபா பரிசும் பராட்டும் இதழும் வழங்கினார். இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை திருவள்ளுவர் திருநாள் விழா.

19.5.1985 ஞாயிறு மாலை மேதகு முன்னாள் குடியரசு தலைவர் திரு ஆர். வேங்கடராமன் அவர்கள் புது டெல்லியில் எழுத்தாளர்களுக்கு அளித்த விருந்தின்போது எடுத்த படம்.
தமிழக முன்னாள் ஆளுநர் மேதகு அலெக்சாண்டர் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5.9.1988 மாநில ஆசிரியர் விருதும், பரிசு ரூபாய் ஐந்நூறும் அளித்துச் சிறப்பித்துள்ளார்கள்.
18.8.1985 ஞான்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் விழாவில், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் திருக்குறள் நெறி பரப்பு மையத்தின் சார்பாக, ‘திருக்குறள் நெறித் தோன்றல்’ என்னும் பட்டத்தை அளித்துப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். படத்தில் முத்தமிழ்க் காவலர் திருக்குறள் நெறி கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும், பரப்பு மைய இயக்குநர், கலைமாமணி திருக்குறளார் வீ. முனிசாமி அவர்களும் உள்ளனர்.

26.4.1972 ஞான்று சென்னை இராசேசுவரி திருமண மண்டபத்தில் கலைமாமணி அவ்வை டி.கே. சண்முகம் அவர்கள் மணிவிழா நடைபெற்றபோது... பேராசிரியர் நாரண துரைக்கண்ணன், அவ்வை டி.கே. சண்முகம், ஆகியோருடன்.
1989 சம்புவரையர் மாவட்டத்தொடக்க விழாவில் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்மு.கருணாநிதி, முன்னாள் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், திருமிகு.வன்னியஅடிகளார், தாமரைக்கண்ணன். 

சென்னையில் நடைபெற்ற அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.அன்பழகன், கவிஞர்.சக்திவசந்தன், திரு.முவேந்தர்முத்து,
ஆகியோருடன் தாமரைக்கண்ணன்.
முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு.வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன்.

டாக்டர் தாமரைக்கண்ணன் எழுதிய ஆறு நூல்களின் அறிமுக விழா 9.3.1985 இல் சென்னை இராயப்பேட்டை சுவாகத் ஓட்டலில் நடைபெற்றபோது, முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் மாண்புமிகு பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்திச் சிறப்பி்த்தார்.

வி.ஜி.பியில் நடைபெற்ற தமிழ் அறிஞர்களைக் கவுரவிக்கும் விழாவில் திரு.வி.ஜி.பன்னிர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகனார் ஆகியோருடன்.

1984 ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர்மனிதருள் மாணிக்கம் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன்.

ஸ்டேட் பேங்க் மற்றும் எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை இணைந்து நடத்திய போட்டியில், இரகசியம் நாடகத்திற்கு முன்னாள் தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்கள் முதல் பரிசு அளித்த போது.

17.1.1988 ஞான்று காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெற்ற இந்து சமயக் கவிஞர் மன்றத்தின் விழாவில் ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் டாக்டர் தாமரைக்கண்ணனுக்குப் பொன்னாடை போர்த்துவித்தார். பொன்னாடை போர்த்துபவர் கவிஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் புலவர் இரா. வெங்கடேசன் எம்.ஏ

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி கோயில் நிறுவனர்... ஆசார்ய பீட நாயகர்... அற்புதச் சித்தர் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களுடன்...

பெரும்பேறு முருகன் கோயில் விழாவில், திருமிகு.சீர்காழி கோவிந்தராசன் மற்றும் திருமிகு,சிவசிதம்பரம் அவர்களுடன் 5.4.1981

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு, டாக்டர் தாமரைக்கண்ணன் அவர்களின் நெருங்கிய நண்பர். இருவரும் 1961இல் சென்னை ஏழுகிணறு ‘குழந்தைகள் உலகம்’ பள்ளி விழாவில் கலந்துகொண்டபோது...

புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் கல்வித்தந்தை  திருமிகு.ஜெகத்ரட்சகன் அவர்களுடன் 17.5.1985  

தினமலர், வாரமலர் ஆசிரியர் திருமிகு. இரமேஷ் அவர்களுடன். 1.9.1985

சென்னையில் நடைபெற்ற அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் எழுத்தாளர் சங்கத் தலைவர் ‘அமுத சுரபி’ ஆசிரியர் டாக்டர் விக்கிரமன் அவர்களுடன்.


9.3.1985 ஞான்று நடைபெற்ற டாக்டர் தாமரைக்கண்ணன் எழுதிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழாவின் போது பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம் அளித்த பல்கலைச் செம்மல் எனும் பட்டத்தை உலகக் கவிஞர் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் அவர்கள் அளிக்கிறார். படத்தில் தாமரைக்கண்ணன் அருகில் அவர் துணைவியாரும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும் மூவேந்தர் முத்துவும், ஓவியர் முகனும் உள்ளனர்.

8.1.1995 தென்னார்க்காடு வள்ளலார் மாவட்ட அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க தொடக்க விழாவில் உரையாற்றிய போது...

14.4.1993 சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழரசி வார இதழின் முதலாண்டு விழாவில் ஆசிரியர் திரு. எம்.நடராசன் அவர்களுடன் தாமரைக்கண்ணன்.

தில்லி தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் தாமரைக்கண்ணன்.

கன்னடத்திரைப்படத்தில் நடித்தபோது தாமரைக்கண்ணன்.